Skip to main content

நாம இன்னிக்கி யூஸ் பண்ற பொருள் எல்லாம், ஆரம்பக் காலத்துல எப்படி இருந்துச்சு தெரியுமா?

இன்று, ஒரு பொருளின் தரத்தை காட்டிலும் கவர்ச்சியை தான் நாம் அதிகம் விரும்புகிறோம். நம் கையில் இருக்கும் மொபைலாகட்டும், நாம் உடுத்தும் உடையாகட்டும். ஏன் உள்ளாடையாகவே இருந்தாலும் கூட, இரண்டு இன்ச் ஜீன்ஸ் கீழே இறக்கி போடுவதன் காரணம் என்ன, தான் அணியும் பிராண்டை பகட்டாக காண்பித்துக் கொள்ளத்தானே. இன்று ஆஹோ, ஓஹோ என நாம் வாய்பிளந்து காணும் உலகின் பல முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் ஆரம்பக் காலக்கட்டத்தில் முதன் முதலில் அவை சந்தைக்கு வந்த போது எந்த தோற்றத்தில் இருந்தன தெரியுமா? 

இதோ! கோல்கேட் பற்பொடி டப்பா முதல், பார்பி டால், ஆணுறை, ஆப்பிள் கம்பியூட்டர், விண்டோஸ் சாப்ட்வேர் என பலவற்றின் ஆரம்பக் கால தோற்றம்... வாங்க பார்க்கலாம்....

ஆப்பிள்! : 




இன்று ஐ-போனின் புதிய மாடல் வருகிறது எனில் அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மற்ற நாடுகளில் வர கொஞ்சம் தாமதமாகும் என்பதை கூட யாராலும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. வெளிநாட்டில் இருக்கும் அக்கா, அண்ணன்களிடம் கூறி உடனே வாங்கி அனுப்ப அடம்பிடிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. ஏனெனில், ஐ-போன் வெறும் மொபைல் அல்ல, ஒருவரின் அந்தஸ்து. இதோ! மரத்தாலான ஆரம்பக் கால ஆப்பிள் கம்ப்யூட்டரின் கிளாஸிக் தோற்றம்.

ஃபோர்டு! : 

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு. இப்போது அந்தந்த நாடுகளின் வசதிக்கு ஏற்ப நிறைய கார்களை தயாரித்து வழங்கி வருகிறது. சந்தையில் ஃபோர்டு நிறுவன கற்களின் தோற்றம் தனக்கான தனிச்சிறப்பு கொண்டிருக்கின்றன. இதோ! ஆரம்ப கால ஃபோர்டு காரின் தோற்றம். இது ஒரிஜினல் ஃபோர்டு மாடல் எ காராகும்.


சாம்சங்! : 

இப்போதைய தலைமுறையிடம் சாம்சங் என்று கூறினால் அவர்களுக்கு மொபைல் தான் முதலில் எண்ணத்தில் உதிக்கும். ஆனால், மொபைல் தயாரிக்கும் முன்னரே பல எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்துள்ளது சாம்சங். இதோ! P-3202 எனும் சாம்சங்கின் முதல் தொலைக்காட்சி பெட்டி.

விண்டோஸ்!



நம்மில் பலர் விண்டோஸ் 98 முதல் தான் கண்டிருப்போம், பயன்படுத்தியிருப்போம். இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதை கூட பார்த்திருப்பார்களா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்குரிய விஷயம் தான். இவர்கள் விண்டோஸ் எக்ஸ்-பியை கண்டிருக்கவே வாய்ப்புகள் குறைவு தான். இதோ! நீங்கள் படத்தில் பார்த்துக் கொண்டிருப்பது தான் ஆரம்பக் காலத்தில் விண்டோஸ் வெளியிட்ட முதல் பிரதியின் தோற்றம்.
கேனான் கேமிரா! : 

டி.எஸ்.எல்.ஆர் கேரமாராக்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருவது கேனான் மற்றும் நிக்கான் நிறுவனம் தான். நிக்கானை அதிகம் புகைப்படக் கலைஞர்களும், கேனானை அதிகம் பொதுமக்களும் விரும்பி வாங்குவது வழக்கம். காரணம், கேனான் கேமாராக்கள் யூசர் ஃபிரண்ட்லி. இதோ! முதன் முதலில் வெளியான கேனான் கேமராவின் தோற்றம். இந்த மாடலின் பெயர் Kwanon.

எச்.பி! : 

லேப்டாப் உலகில் லெனோவா மற்றும் எச்.பி-க்கு எப்போதுமே அதிக மவுசு உண்டு. அதிலும், சிறந்த திறன்பாடு என்று வகைபிரிக்கும் போது எச்.பியை பலரும் தேர்வு செய்வதுண்டு. எச்.பி 110 எனும் எச்.பி லேப்டாப்பின் ஆரம்பக் கால மாடலின் தோற்றம் இப்படி தான் இருந்துள்ளது

நிவ்யா க்ரீம்! : 

இன்று காஸ்மெடிக் பொருட்கள் தயாரிப்பில் உலக சந்தையில் முதன்மை இடத்தில் திகழ்ந்து வரும் நிவ்யாக்ரீம் டப்பாவின் தோற்றம் ஆரம்பக் களத்தில் இப்படி தான் இருந்துள்ளது.

சோனி! : 

டிஜிட்டல் வீடியோ கேமாரா உலகில் தனக்கான இடத்தை மிக வலுவாக பிடித்துள்ளது சோனி நிறுவனம். லேப்டாப், மொபைல், கேமரா என எதுவாக இருந்தாலும் சோனி என்றால் அதன் ஸ்லீக் லுக் தான் முதலில் மனதில் பதியும். எலக்ட்ரானிக் பொருட்களின் தோற்றத்தில் கவர்ச்சியை புகுத்திய நிறுவனம் என்றும் சோனியை கூறலாம். இதோ! சோனி நிறுவனம் தயாரித்த முதல் வீடியோ கேமராவின் தோற்றம். இந்த மாடலின் பெயர் HVC - F1 ஆகும்

ஐ-போன்! : 

இந்த தலைமுறையில் பிறந்திருந்தாலும், குறைந்த காலக்கட்டத்தில் பெரும் வளர்ச்சி கண்ட பொருள் ஐ-போன். பல புதிய டெக்னாலஜிகளை மொபைலில் கொண்டுவந்த பெருமையும் ஐ-போனுக்கு உண்டு. ஆரம்பக் காலத்தில் வெளியான முதல் ஐ-போனின் தோற்றம் இது.

கோல்கேட்! : 

கரி தேய்த்து பல் துலக்கி வந்தவர்களை வெள்ளை சூழ்ச்சியில் பற்பொடிக்கு மாற்றிய பெருமை கோல்கேட்டுக்கும் உண்டு. இன்று சென்ஸிடிவ் பற்கள், குழந்தைகளுக்கு, வாய் துர்நாற்றத்திற்கு என பல்வேறு வகைகளில் கிடைக்கும் கோல்கேட் நிறுவனத்தின் ஆரம்பக் கால பற்பொடி டப்பாவின் தோற்றம்.





Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...