Skip to main content

குஜராத்தில் மோடியின் இறுதி ஆயுதம் கண்ணீர் : ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ்

அகமதாபாத் : குஜராத் தேர்தலில் பா.ஜ.க.,வை வெற்றி பெற வைக்க இனி மோடியிடம் கைவசம் இருப்பது கண்ணீர் தான் என்று காங்கிரஸிற்கு ஆதரவளித்து வரும் ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்புத் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்து உள்ளார். குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 


தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க ஐந்து கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை மட்டுமே அறிவித்து உள்ளது. பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

22 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.,வை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. ஆளும் பா.ஜ.க.,வின் மீது அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவர்களைத் திரட்டி பா.ஜ.க.,வை எதிர்க்க காங்கிரஸ் வியூகம் வகுத்து இருக்கிறது.



ஆதரவளித்த பட்டேல்கள் : இதனடிப்படையில் ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டேல் இன போராட்டக்குழுவிடம் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி அளித்து ஆதரவைப் பெற்று இருக்கிறது காங்கிரஸ். அதுபோல தலித் இன மக்களுக்காகப் போராடி வரும் ஜிக்னேஷ் மேவானியுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவரான அல்பேஷ் தாகூரும் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.

அம்புகள் எய்ந்த பா.ஜ.க : இந்நிலையில், ரதன்பூரில் ஒரு கூட்டத்தில் பேசிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர், நாளுக்கு நாள் பா.ஜ.க செல்வாக்கு தொய்வடைந்து வருவது தெரிகிறது. எங்களின் மீது அனைத்து விதமான அம்புகளையும் எய்து எங்களை அவர்கள் வழிக்குவரும்படி பணித்தார்கள். ஆனால், நானோ, ஹர்திக்கோ, ஜிக்னேஷோ அவர்களுக்கு ஆதரவளிப்பதாக இல்லை என்றார்.

குஜராத் பிரச்னைகள் : மேலும், இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் ஹர்திக் பட்டேலுக்கு எதிரான கொள்கையில் நான் போராடி வருகிறேன். ஆனால், இது எந்தவிதத்திலும் வெற்றியை பாதிக்காது. விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு என அனைத்து துறையும் தற்போதைய அரசால் மோசமான நிலையை அடைந்து இருக்கின்றன. சுமார் 50 லட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இதை எல்லாம் மாற்றுவதற்கு நாம் இப்போது காங்கிரஸோடு கைகோர்க்க வேண்டி இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

மோடியின் இறுதி ஆயுதம் : தற்போது பா.ஜ.க., தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறது. தற்போது அவர்கள் தலைவர் மோடியிடம் இருக்கும் கடைசி ஆயுதம் கண்ணீர் தான். விரைவில் குஜராத் மக்களிடம் வந்து தன்னுடைய கண்ணீரை சிந்தப்போகிறார். எனக்காக ஓட்டு போடமாட்டீர்களா? என்று கேட்கப்போகிறார் என்று அல்பேஷ் குறிப்பிட்டார். அப்படி வந்தாலும் உங்கள் பெருமைக்காக எங்களால் இன்னொரு முறை சாகமுடியாது என்று கூற மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...