Skip to main content

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்




இரத்த சோகை
கண்புரை
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
உடல் பருமன்
வயிற்றுக்கடுப்பு
காலைச் சோர்வு
குமட்டல் மற்றும் வாந்தி
செரிமான கோளாறு
பசியின்மை மற்றும் சுவையின்மை
சிறுநீரக பிரச்சனைகள்
பூச்சிக்கடி


கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.

இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.இரத்த சோகை நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.கண்புரை வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

மலச்சிக்கலால் பல நாட்களாக அவஸ்தைப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் 4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.வயிற்றுப்போக்கு 15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.

உடல் பருமன் உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.வயிற்றுக்கடுப்பு

வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள்.

இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.காலைச் சோர்வு கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.குமட்டல் மற்றும் வாந்தி மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

செரிமான கோளாறு செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.பசியின்மை மற்றும் சுவையின்மை உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா? சுவை எதுவும் தெரியவில்லையா? அப்படியெனில் அதனை சரிசெய்ய, மோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.சிறுநீரக பிரச்சனைகள் கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக்கிடப்பது கருவேப்பிலை ஆகும். இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது.இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே குறிப்பிடுகின்றோம். கறிவேப்பிலை ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.கருவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது. இதனைக் கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறிய என்றும் குறிப்பிடுவார்கள்.கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர்.இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும்.நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும்,  இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.பூக்கள் கொத்தாக அமைந்திருக்கம், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும்.

கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.இவ்விலை உணவுக்கு ஒருவித நறுமணத்தைக் கொடுப்பதால் இந்தியர்கள் பெரும்பாலனவர்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவில் குழம்பு, மிளகுநீர், நீர்மோர், தயிரலும் இதனை தாளிதம் செய்து சேர்ப்பார்கள்.சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. எனவே தான் இதற்கு கறிவேப்பிலை என பெயர் வந்தது.

கறிவேப்பிலைக்கு மணமும், குணமும் சிறப்பாக இருப்பதால் துவையல் செய்தும் சாப்பிடலாம், இதில் காரப்பொடி செய்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிடலாம்.

100 கிராம் கீரையில் 830 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 221 மில்லி கிராம் மக்னீசியச் சத்தும், 132 மி.கி, இரும்புச் சத்தும், 0.21 மி. கிராம் தாமிரச் சத்தும், 81 மி. கிராம் கந்தகச் சத்தும், 198 மி, கிராம் குளோரின் சத்தும் உள்ளன. உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A.     12.600 அனைத்து வகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது. கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் 'சித்தர் வாசுட நூலில்’ உள்ளன. இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை    இத்துடன்    மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம்,      மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய்,     பிரமேகட்டு நோய்கள் குணமாகும். இந்த கீரையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கறிவேப்பிலை ஈர்க்கின் முலைப்பாலிட்டு இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி சேர்த்து மூன்றுமுறை குழந்தைகளுக்கு ஊட்ட வாந்தி நிற்கும். பசி மற்றும் உணவு உண்ணும் வேட்கை மிகுதிப்படும்.உணவுடன் சேர்க்கப்படும் கறிவேப்பிலை இலைகளை உணவுக்கு மணம் ஊட்டிய பின் நீக்கிவிட வேண்டும் என்று தேவையில்லை. உணவோடு அதனைச் சேர்த்து உண்பதே சிறந்தது.இவ்வாறு உணவுடன் செல்லும் இந்த கறிவேப்பிலை மலத்தின் திராவம் சத்தை வற்றச் செய்யவல்லது. வயிற்றிலுள்ள வாயுவைப் பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும்.நல்ல பசி, ருசி, ஜீரண சக்தியைத் தரும். மலக்கட்டு வாயுக்கட்டுகளைப் போக்கி மலத்தை வெளியாக்கவல்லது.

இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண உறுப்புக்களின் நண்பன் என்று கூறலாம்

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...