மேற்கத்திய நாடான அமெரிக்காவை மட்டும் ஏன் புயல்கள் அதிகளவில் தாக்குகின்றன?
இந்த கேள்விக்கான பதிலை இங்கு காண்போம்.
அமெரிக்காவை இதுவரை தாக்கியுள்ள புயல்களில் அதிகளவு ஒரே இடத்தில் இருந்து தான் தோன்றியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களுக்கு மத்தியில் உள்ள அண்டார்ட்டிகா கடலில் தான் இந்த சூறாவளி புயல்கள் தோன்றுகின்றன.
இந்த பகுதி மிகவும் குளிர்ந்துள்ள பிரதேசமாகும்.
இதற்கு அடுத்து ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கடுமையான வெப்பக்காற்று உருவாகி அது Cape Verde வழியாக பயணமாகிறது. குளிர்ந்த காற்றும், வெப்பக்காற்றும் ஒன்றாக இணையும்போது ஒரு அசுரத்தனமான சூறாவளி உருவாகிறது.
இந்த சூறாவளி காற்று ‘ஆப்பிரிக்காவின் ஜெட்’ என அழைக்கப்படுகிறது. இந்த சூறாவளி மேற்கு நோக்கி வீசுவதால் கியூபா வழியாக அமெரிக்காவை அடைகிறது.
ஆப்பிரிக்காவின் ஜெட் எனப்படும் இந்த சூறாவளி காற்று ஆண்டு முழுவதும் உற்பத்தியாகி வலிமையானதாக உருவாகிறது. இந்த வலிமையான சூறாவளி செப்டம்பர் மாதங்களில் அதிகளவில் உருவாகிறது.
இந்த சூறாவளி காற்று பூமத்திய ரேகை பகுதியில் உள்ள தண்ணீரில் பலமாக மோதுகிறது. பின்னர், இந்த சூறாவளி காற்று வலுவடைந்து காற்றழுத்த சுழற்சியை உருவாக்குகிறது.
இந்த காற்றழுத்த சுழற்சி இடி மற்றும் பெருமழையை உருவாக்குகிறது. இவ்வாறு மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று சுற்றும்போது அது புயல் சின்னம் 1 என அழைக்கப்படுகிறது.
இந்த காற்று மணிக்கு 157 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல் சின்னம் 5 என அழைக்கப்படுகிறது. இது தான் பூமியில் நிகழ்ந்த மிக மோசமான புயல் சின்னமாகும்.
இன்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை தாக்க உள்ள இர்மா புயலும் 5 வகையை சேர்ந்தது தான்.
இவ்வாறு அட்லாண்டிக் கடலில் உருவாகும் புயல் சின்னங்களில் பலவும் பல்வேறு தீவு நாடுகள் மீது மோதி வலுவடைந்துவிடுகிறது.
ஆனால், சில புயல்கள் கரீபிய தீவு நாடுகளை தாண்டி அமெரிக்காவை நிலைகுலைய வைக்கிறது.
சில புயல்கள் அமெரிக்கா, மெக்ஸிகோவை தாண்டி சென்று அங்குள்ள தீவு நாடுகளை தாக்குகிறது.
இறுதியாக, அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளையும் தாக்கும் புயல்கள் அனைத்தும் சஹாரா பாலைவனம் போன்ற வெப்பமான பகுதிகள் உருவாகும் காற்று மூலமே உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment