Skip to main content

தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும் உள்ள சம்பந்தம்


தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!
தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ??



இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க !
களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை !
கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது.


அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள்
அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !
இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!
நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!
தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது.

அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.

சாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.
கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள்.
இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் போர் போடும் வேலையை உடனடியக நிறுத்திவிட்டார்கள் !
ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி , நான்குபுறமும் அகலிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் !
இவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா?
அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது !
அகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது !
இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.

அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !

சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று !😍😍
கட்டிடக்கலையின் அவமானமாக இருக்கக்கூடிய பைசாவின் சாய்ந்த கோபுரம் உலகின் அதிசயமான கட்டிடமாக கருதப்படும் இந்த உலகில் , தன்னை தானே நேராக்கி கொள்ளும் தஞ்சை பெரியகோவில் தற்கால தமிழர்களின் இயலாமையின் அடையாளம்...


Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEWYORK Times ன் உலக பட்டியலில் தமிழ்நாடு,,,,,

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!! உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் ந...